மனு கொடுக்க வந்தவர்களை சோதனை செய்ததால் பரபரப்பு

மனு கொடுக்க  வந்தவர்களை
சோதனை செய்ததால் பரபரப்பு

திருப்பத்துார்
திருப்பத்துாரில், மனு கொடுக்க வந்தவர்களை போலீசார் சோதனை செய்ததால் வாக்குவாதம், பரபரப்பு ஏற்பட்டது.
விஜய பாரத மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் ஜெய்சங்கர் தலைமையில் நிர்வாகிகள் மனு கொடுக்க  திருப்பத்துார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு  வந்தனர். கலெக்டர் அலுவலக பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவர்களை தடுத்து சோதனை செய்தனர். எதற்காக இந்த சோதனை என கேட்டதற்கு, பாக்கட்டில் பிளோடு வைத்துள்ளீர்களா என்பதை கண்டறியத்தற்காக என போலீசார் கூறினர். ஆத்திரமடைந்த விஜய பாரத மக்கள் கட்சியினர், நாங்கள் என்ன தற்கொலை செய்து கொள்வதற்காகவா  வருகிறோம், மக்கள் பிரச்சனையை தெரிவிக்கத்தான் வந்திருக்கிறோம், எங்களை சோதனை செய்ய உங்களுக்கு அதிகாரம் இல்லை என வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போலீசார் சோதனை செய்யாமலேயே அவர்களை உள்ளே அனுப்பினர். பின் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா விடம் விஜய பாரத மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் ஜெய்சங்கர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பத்துார் கோட்டை தெருவிலுள்ள பிரமேஸ்வரர் மற்றும் கஜேந்திர பெருமாள் கோவில்கள், நான்காம் நுாற்றாண்டில் கோச்செகாணன் என்ற அரசனால் கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலம் வேற்று மதத்தினரால் ஆக்கரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதில் வீடுகள், கடைகள் கட்டி அனுபவித்து வருகின்றனர். கோவில் பிரகாரங்களில்  ஆக்கரமிப்பு செய்துள்ளனர். தற்போது சுவாமி வீதியுலா வரும் இடங்கள் கூட ஆக்கரமிப்பு செய்யப்பட்டுள்ளது. பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. திருப்பத்துார் மாவட்டத்தில் ஓடும் பாலாற்றில் உள்ள பாலாற்றில் உள்ள ஆக்கரமிப்புக்களை அகற்ற வேண்டும். பாலாற்றின் இரு கரைகளை அளவிட்டு கரைகளில் தடுப்பு சுவர் அமைத்து தோல் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்.
ஆம்பூர் பகுதியில் பாலாற்றங்கரைகளில் உள்ள தோல் தொழிற்சாலைகள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து சுத்தம் செய்யாமல் வெளியேற்றுவதால் பாலாறு மாசுபட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதை தடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில்  குறிப்பிட்டிருந்தனர்.
அப்போது கோவில் நிலம் ஆக்கரமிப்பு எப்போது அகற்றப்படும் என தலைவர் ஜெய்சங்கர் கேட்டதற்கு, ஆய்வு நடத்திய பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா கூறினார்.
ஒவ்வொரு முறை மனு கொடுக்கும் போதும் இப்படித்தான் கூறுகிறீர்கள், ஆக்கரமிப்பு அகற்றும் தேதியை உடனே சொல்ல வேண்டும், தவறினால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என ஜெய்சங்கர் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.  இதனால் அவர்களை வெளியேற்றும்படி போலீசாருக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டார். போலீசார் அவர்களை வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை