கண்டிப்பு

தமிழகத்தில் மத அடிப்படைவாதிகளின் வன்முறைகள் வன்மையாக கண்டிக்கிறோம்

தமிழகம் முழுவதும் என் ஐ ஏ சோதனை எதிரொலியாக பாஜக மற்றும் இந்து அமைப்பு பொறுப்பாளர்களின் வீடுகள் கடைகள் நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு கைகட்டி வாய் புத்தி வேடிக்கை பார்க்கும் தமிழக திமுக அரசு வன்மையாக கண்டிக்கத்தக்கது வன்முறையில் ஈடுபட்ட ஈடுபட்டுக் கொண்டுள்ள சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது கேள்விக்குறியாக இருக்கிறது திமுக ஆட்சியின் தொடர் தோல்விகளால் பிரச்சனைகளை திசைதிருப்ப இது போல வன்முறைகள் தூண்டி விடப்படுகிறதா ? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள் இதற்கு தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் 

தமிழகத்தினுடைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழ் பரப்புரை கழகம் என்ற அமைப்பை தொடங்கி வைத்து பேசும்பொழுது மொழியால் இணைந்தவர்களை மதத்தால் பிரிக்க நினைக்கிறார்கள் அது நடக்காது என்று பேசுகிறார்கள் பாரத தேச அளவில் கலாச்சார பண்பாட்டால் சனாதான தர்மத்தால் இணக்கமாக வாழ்ந்து கொண்டிருந்த தமிழக மக்களை கடந்த 50 ஆண்டுகளில் தமிழ் மொழியை காப்பதாக சொல்லி அதன் பெயரால் யுத்தம் நடத்தி தமிழை அழித்து விட்டார்கள் என்பது தான் உண்மை ஆனால் இன்று தன்னுடைய ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள மீண்டும் தமிழைப் பற்றி பேசுகிறார்கள்  தமிழும் சனாதான தர்ம ஆன்மீகமும் பிரிக்க முடியாது ஆனால் இவர்கள் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறுவதற்காக பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறார்கள் பெரும்பான்மை இந்துக்கள் சகிப்புத்தன்மை உள்ளவர்கள் எதையும் பெரிதாக பொருட்படுத்த மாட்டார்கள் திமுகவில் உள்ள அடிமைகள் என்றைக்கும் நமக்கு அடிமையாகவே இருந்து கொண்டிருப்பார்கள் மக்கள் பணத்தை வாங்கிக்கொண்டு நமக்கு வாக்களிப்பார்கள் ஆகையால் பொய் புரட்டுகளைச் சொல்லி எப்படியாவது இந்த ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக முதல்வர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது தமிழகத்தில் திமுக அழிவுப்பாதையை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளது அவர்களுடைய செயல்பாடுகளில் ராஜ தர்மமும் நீதியும் கடைப்பிடிக்கவில்லை என்று சொன்னால் திமுக அழிவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதுதான் எதார்த்தமான உண்மை

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை