பலி
அரசு ஆஸ்பத்திரியில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரு பச்சிளம் அடுத்தடுத்து உயிரிழப்பு
திருப்பத்துார்,செப்
திருப்பத்துார் அருகே செலந்தம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அருண்(28). கட்டட தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது.
இந்நிலையில், கர்ப்பம் தரித்த புவனேஸ்வரிக்கு
ஒரு மாதத்துக்கு முன் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு திருப்பத்துார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஒரே பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது.
அதன்பின் பிறந்த இரண்டு பெண் குழந்தைகளும் எடை குறைவாக இருப்பதால், குறைந்தது ஒரு மாதமாவது தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் கண்காணிப்பில் குழந்தைகள் இருக்க வேண்டுமென டாக்டர்கள் குழந்தையின் பெற்றோரிடம் கூறினர்.
இதனையடுத்து டாக்டர்கள் ஆலோசனைப்படி ஒரு மாதம் முடிந்ததும் குழந்தைகளை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், ஒரு வாரத்துக்கு முன் இரண்டு குழந்தைகளுக்கும் திடீரென மூச்சு திணறு ஏற்பட்டது. உடனே குழந்தைகளை மீட்டு மீண்டும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அதில் ஒரு குழந்தை இரு நாட்களுக்கு முன்பும், மற்றொரு குழந்தை நேற்று முன்தினம் இரவும் அடுத்தடுத்து இறந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தைகளின் பெற்றோர் ஆஸ்பத்திரி வளாகத்தில் கதறி துடித்தனர்.
இது குறித்து குழந்தையில் தந்தை அருண் கூறுகையில்,
ஒரே பிரசவத்தில் பிறந்த இரண்டு குழந்தைகளும் எடை குறைவு காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் ஒரு மாதம் பராமரிப்பில் இருக்க வேண்டுமென டாக்டர்கள் கூறினர். அதற்கு சம்மதம் தெரிவித்தேன்.மேலும் டாக்டர் ஒருவர் தனக்கு சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார். அதில் இருந்து அவ்வப்போது மருந்து,மாத்திரைகளை வாங்கி வர சொல்லுவார்.
அவர் கேட்கும் மருந்து, மாத்திரைகளை நாங்கள் வாங்கி கொடுத்தோம் இதுவரை சுமார் ரூ.30 ஆயிரம் வரை மருந்து, மாத்திரைக்காக செலவு செய்துள்ளோம். ஆனால் எந்த பயனும் இல்லாமல் அடுத்தடுத்து இரண்டு குழந்தையும் இறந்தது.
மேலும்,தினக்கூலி வேலை செய்து வரும் எங்களால் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை பெற முடியாத காரணத்தினால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறோம்.
ஆனால், இங்கு மருந்து பற்றாக்குறையா? அல்லது வர்த்தக ரீதியாக டாக்டர்கள் செயல்படுகிறார்களா? என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து திருப்பத்துார் மாவட்ட பொது சுகாரம் இணை இயக்குனர்
மாரிமுத்து கூறுகையில்,
அருண்,புவனேஸ்வரி தம்பதியர்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை 900 கிராம், மற்றொரு குழந்தை ஒரு கிலோ 5 கிராம் எடையில் பிறந்தது.
இதன் காரணமாக டாக்டர்கள் ஆலோசனைப்படி பிறந்த இரட்டை குழந்தைகள் இரண்டும் சுமார் ஒரு மாதமாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
குழந்தைகளில் சிகிச்சையில் முன்னேற்றம் காணப்பட்டதால் ஒரு வாரத்துக்கு முன் குழந்தையின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன் குழந்தைகளுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்படுவதாக கூறி மீண்டும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அதன்பின் சிகிச்சை பலனின்றி இரண்டு குழந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தது.
புவனேஸ்வரிக்கு இது மூன்றாவது பிரசவமாகும். இந்த மூன்றாவது பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறந்தது. இதுபோன்று முதல் பிரசவத்தில் ஒரு குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் ஒரு குழந்தை என நான்கு குழந்தைகளும் இதே போன்று தான் எடை குறைவு காரணமாக இறந்தது.
இவர்களுக்க பிறந்த இரட்டைக் குழந்தைகளை பெற்றோருடன் ஒப்படைத்தபோது, குழந்தைகள் பராமரிப்பு குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.
ஆனால் அவர்கள் குழந்தைகளை வீட்டிற்கு கொண்டு சென்ற பிறகு தனிப்பட்ட வகைகள் ஏதேதோ குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர். இதனால் குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது.
மேலும், திருப்பத்துார் அரசு ஆஸ்பத்திரியில் போதுமான மருந்துகளும் மாத்திரைகளும் உள்ளது. இங்கு சிகிச்சை பெற வருபவர்களை வெளியில் இருந்து மருந்து, மாத்திரைகள் வாங்கி வர சொல்வதில்லை இது முற்றிலும் தவறான கருத்து என்றார்.

Comments
Post a Comment