மீட்பு


சினிமாவில் நடிக்க ஆசையால்
வீட்டை விட்டு வெளியேறிய
பள்ளி மாணவிகள் மீட்பு


வேலுார்
வேலுரில், சினிமாவில் நடிக்க ஆசையால் வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவிகள் மீட்கப்பட்டனர்.
வேலுார் புதிய பஸ் ஸ்டாண்டில் இன்று காலை சுற்றிக்கொண்டிருந்த இரண்டு பள்ளி மாணவிகளை போலீசார் மீட்டு வேலுார் சமூக நலத்துறை அதிகாரிகளிடம் ஒப்டைத்தனர். விசாரணையில் அவர்கள், திருப்பத்துார் மாட்டத்தை சேர்ந்தவர்கள், பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர், சினிமாவில் நடிக்க ஆசையால் சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி சென்னை கோடம்பாக்கத்திற்கு சென்று சில ஸ்டியோக்களில் வாய்ப்பு கேட்டுள்ளனர்.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்று தெரிந்ததால் அவர்கள் பஸ் மூலம்  வேலுார் புதிய பஸ் ஸ்டாண்டிற்கு வந்து சொந்த ஊருக்கு செல்ல பணம் இல்லாததால் சுற்றிக்கொண்டிருந்தது தெரியவந்தது. அதிகாரிகள் அவர்களுக்கு அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை