கம்மல் பறிப்பு

கத்தி முனையில் மூதாட்டி கடத்தி கம்மல் பறிப்பு

திருப்பத்துார்

திருப்பத்துார் அருகே ஜவ்வாது மலை, புங்கம்பட்டு நாடு பஞ். தகர குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் காளி. இவரது மனைவி சேமியம்மாள்(70). காளி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் சேமியம்மாள் தனது மகன்கள் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் புதுார்நாடு கிராமத்தில் உள்ள தனது உறவினர்களை பார்க்க சேமியம்மாள் சென்றார். அதன்பின் பகல் ஒரு மணியளவில் மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக சேமியம்மாள் தனியாக நடந்து சென்றார். அப்போது ஒரே பைக்கில் வந்த இருவர் சேமியம்மாளை கத்தி முனையில் தனது பைக்கில் கடத்தி சென்றனர்.

சிறிது நேரத்தில் மூதாட்டி காதில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் கொண்ட இரண்டு கம்மல்களை மர்ம நபர்கள் 
கத்தியால் காதை அறுத்து கம்மலை பறித்து கொண்டு மூதாட்டியை பைக்கில் இருந்து கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த கிராம மக்கள் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மூதாட்டியின் மகன் கோவிந்தசாமி கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்துார் தாலுகா போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை