மனு கொடுத்தார் போலீசார் சோதனை வாக்குவாதம்
பாக்கெட்டில் பிளேடு போலீசாரிடம் கொந்தளித்த விஜய பாரத மக்கள் கட்சியினர்
திருப்பத்துார்,செப்.20−
விஜய பாரத மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஜெய்சங்கர் மற்றும் இந்து அமைப்பினர் கலெக்டரிடம் அளித்த மனு கூறியிருப்பதாவது,
திருப்பத்துார் நகராட்சிக்கு உட்பட்ட கோட்டை தெருவில் உள்ள பிரமேஸ்வரர் மற்றும் கஜேந்திர பெருமாள் கோயில்கள் 4ம் நுாற்றாண்டில் கோச்செங்காணன் என்ற அரசனால் கட்டப்பட்டது.
கோயிலுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலம்,இடங்கள் வேற்று மதத்தினரால் ஆக்கிரப்பு செய்தப்பட்டு அதில் வீடுகள், மண்டபங்கள் கட்டி அனுபவித்து வருகின்றனர்.மேலும் கோயில் பிரகாரங்களில் கூட ஆக்கிரமிப்பு உள்ளது.
சாமி வீதியுலா வரும் மாட வீதிகளில் கூட இப்போது ஆக்கிரமித்துவிட்டனர். இது குறித்து பலமுறை புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கோயில் சொத்துக்களையும், இடங்களையும் மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
இதே போன்று திருப்பத்துார் மாவட்டத்தின் ஜீவாதாரமாக விளங்கும் பாலாறு நதி ஆக்கிரமிப்புகளை அகற்றி பாலாற்றை அளவிட்டு நகர பகுதிகளில் கரைகளில் தடுப்பு சுவர்கள் அமைத்து நகராட்சி கழிவுகள் பாலாற்றில் கலக்காமல் செய்ய வேண்டும்.
ஆம்பூர் பகுதியில் பாலாற்று கரைகளில் உள்ள தோல் தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து ரசாயனம் கலந்த கழிவு நீரை சரியாக சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே வெளியேற்றுவதால் பாலாறு மிகவும் மாசு அடைந்துள்ளது. அதனை உடனடியாக தடுத்து நிறுத்தி பாலாற்றை பாதுகாக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.
அப்போது விஜய பாரத மக்கள் கட்சியினர் கலெக்டரிடம் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு எப்போது அகற்றப்படும்? அதற்கான தேதியை கூற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதற்கு கலெக்டர் ஆய்வு நடத்திய பிறகுதான் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
அதனை ஏற்க மறுத்த விஜய பாரத மக்கள் கட்சியினர் தேதியை உடனே குறிப்பிட வேண்டும். இல்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என கூறினர்.
அதற்கு கலெக்டர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை அழைத்து விஜய பாரத மக்கள் கட்சியினரை வெளியேற்றினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
முன்னதாக மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த விஜய பாரத மக்கள் கட்சியினரை கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை சோதனை செய்தனர்.
அப்போது எதற்காக இந்த சோதனை என அவர்கள் கேட்டதற்கு, பாக்கெட்டில் பிளேடு மறைத்து வைத்துள்ளீர்களா என
சோதனை செய்கிறோம் என போலீசார் கூறியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த
விஜய பாரத மக்கள் கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Comments
Post a Comment