சேகாரம்

ஸ்ரீ பகளாமுகீ த்யானம் 

கம்பீராம்ஸ மதோன்மத்தாம் 
தப்த காஞ்ஜன ஸந்நிபாம்
ஸதுர்புஜாம் த்ரிநயனாம்
கமலாஸன ஸம்ஸ்திதாம்
பீதாம்பரதராம் ஸாந்த்ர
த்ருடபீன பயோதராம்
ஹேமகுண்டல ஸம்பூஷாம்
பீத சந்த்ரார்த்த சேகராம் ! ,

பொருள் : 

கம்பீரமான தோற்றம் அளிப்பவளும் அம்ருதக் கடலின் நடுவில் மணிமண்டபத்தில் ரத்னமயமான மேடையில் தங்க சிம்மாசனத்தில் அல்லது தாமரைமலரில் வீற்றிருப்பவளும் உருக்கிவிடப்பட்ட பொன்னைப் போன்ற மேனியை உடையவளும் மூன்று கண்களை உடையவளும் தங்க குண்டலங்களை அணிந்தவளும் பிறைச்சந்திரனை தன் சிரசில் சூடியிருப்பவளும் மேல்நோக்கிய ஜடாபாரம் உடையவளும் பயம் அளிக்கும் முகத்தைக் கொண்டவளாகவும் சௌம்ய முகத்தைக் கொண்டவளாகவும் காட்சியளிப்பவளும் தெரிக்கும் புருவத்தை உடையவளும் ஒரு கையில் கதாயுதத்தையும் மறு கையில் எதிரியின் நாக்கினைக் கொண்ட இரு கரத்தினளாகவும் வஜ்ரம் ; கதை ; நாக்கு ; அபயம் கொண்ட நான்கு கரத்தினளாகவும் காட்சி அளிப்பவளும் சம்பகவனம் போன்று திகழ்பவளும் வெண்மயான சந்திரனைப் போன்று பிரகாசம் வாய்ந்த முகத்தை உடையவளும் ஆகிய பகளாமுகி தேவியை வணங்குகிறேன்!  ,

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை