தீக்குளிப்பு
வாலிபர் மீது போக்சோ விரக்தியில் தீக்குளிப்பு
வாணியம்பாடி
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அண்ணா நகர் சி.எல் காலனி பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (21).கூலி தொழிலாளி.இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை சுமார் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 13ம் தேதி
திருநாவுக்கரசு சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து மகள் மாயமானதை கண்டு அதிர்ச்சிடைந்த சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.பின்னர் சிறுமியின் பெற்றோர் இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசில் புகாரளித்தனர்.
அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து திருநாவுக்கரசை கைது செய்தனர். முன்னதாக திருநாவுக்கரசிடம் இருந்த சிறுமியை போலீசார் மீட்டனர்.
மேலும், சிறுமியை கடத்திய வழக்கில் திருநாவுக்கரசு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் விசாரணை என்ற பெயரில் தனது குடும்பத்தாரை,தன்னையும் அடிக்கடி போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைக்கழிப்பு செய்வதால் விரக்தியடைந்த திருநாவுக்கரசு நேற்று தன் மீது தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார்.
உடனே அங்கிருந்தவர்கள் திருநாவுக்கரசை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலுார் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Comments
Post a Comment