கைது
சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
ஜோலார்பேட்டை,செப்
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை சேர்ந்த 16 வயது சிறுமி இரு நாட்களுக்கு முன் மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில்,ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பார்சம்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபாகரன்(22). என்பவர், அச்சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் பிரபாகரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். முன்னதாக அவரிடம் இருந்த சிறுமியை போலீசார் மீட்டனர்.
Comments
Post a Comment