கைது
இராணிப்பேட்டையருகே கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்றவர் கைது
காவல் போலீஸார் நடவடிக்கை.
இராணிப்பேட்டை ,செப்
இராணிப்பேட்டை சிப்காட் அடுத்த நவலாக் புளியங்கன்னில் வீட்டில் வைத்து கள்ளத்தனமாக மதுபாட்டில்களை விற்ற இளைஞரை காவல் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே உள்ள நவலாக் புளியங்கன்னுவில் நீண்ட நாட்களாக மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கிவைத்து கள்ளத்தனமாக விற்கப்படுவதாக பல்வேறு தரப்பினர் புகார் எழுப்பிவந்தனர் . இந்நிலையில் நேற்று மாவட்ட காவல்பிரிவு உதவி ஆணையர் சேகர்மற்றும் வாலாஜா காவல் போலீஸ்எஸ்ஐ செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் . நேற்றுகாலை மேற்படி பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டபோது விஜயகுமார்(44 ) தனது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்வதையறிந்தனர் .உடனே அங்கு சென்ற உதவிஆணையர் சேகர்மற்றும் காவல் போலீஸார் மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டிருந்த விஜயகுமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து வீட்டில் பதுக்கிவைத்தரூ15ஆயிரம் மதிப்புள்ள பிராந்தி,ரம்,உள்ளிட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர் இதனையடுத்து காவல்போலீஸார் விஜயாகுமார் மீது வழக்குபதிவுசெய்து அவரை சிறையிலடைத்தனர் .
Comments
Post a Comment