கைது
*3 புல்லட், ஒரு கார் திருடிய வேலூர் இளைஞர்கள் இரண்டு பேரை அரக்கோணம் போலீசார் கைது செய்தனர்*
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்டத்துக்குட்பட்ட காவல் நிலைய எல்லைகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடு போனது. வாகனங்களை பறி கொடுத்தவர்கள் காவல் நிலையங்களில் தொடர்ந்து புகார் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து அரக்கோணம் டிஎஸ்பி பிரபு உத்தரவின் பேரில் அரக்கோணம் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பழனிவேல் , சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு இருசக்கர வாகன திருடர்களை பிடிக்க தீவிர சோதனை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் அரக்கோணம் அடுத்த சாலை கிராமத்தில் திருட்டு புல்லட்டை ஒருவரிடம் ரூபாய் 15 ஆயிரத்திற்கு இரு வாலிபர்கள் விற்பனை செய்ய முயன்றனர். இந்த தகவல் அரக்கோணம் தாலுகா போலீசருக்கு கிடைத்தது .
போலீசாரின் ரகசிய கண்காணிப்பில் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தாராபடவேடு குளக்கரை தெருவை சேர்ந்த ஓம் பிரகாஷ் வயது 25 மற்றும் காட்பாடி பாரதிநகரை சேர்ந்த நிதிஷ்குமார் வயது 19 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திருடிய மூன்று புல்லட்டுகள் , ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் விசாரணையில் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக பைக் மற்றும் காரை திருடி விற்பனை செய்ததாக இரு இளைஞர்களும் கூறினர். போலீசார் பறிமுதல் செய்த புல்லட் மற்றும் காரின் மதிப்பு மொத்தம் 6 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment