தெரியுமா
முதல் இளையோருக்கான மாவட்ட தடகள போட்டிகள் அக்.2ம் தேதி நடக்கிறது
திருப்பத்துார்,செப்.20−
இது குறித்து மாவட்ட தடகள சங்க செயலாளர் சிவப்பிரகாசம் வெளியிட்ட செய்தி குறிப்பு:
திருப்பத்துார் மாவட்ட தடகள சங்கம் நடத்தும் முதல் இளையோருக்கான மாவட்ட தடகள போட்டிகள் வரும் அக்.2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு ஜோலார்பேட்டையில் உள்ள அரசு மினி ஸ்டேடியம் மைதானத்தில் நடக்கிறது.
எனவே திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகள் மற்றும் விளையாட்டு சங்கங்களில் பயிற்சி பெரும் இளம் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் 14,16,18 மற்றும் 20 வயது பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது.
இதில் வெற்றி பெரும் மாணவ, மாணவிகள் வரும் அக்.13ம் தேதி முதல் 16ம் தேதி வரை திருவண்ணாமலையில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து பங்கேற்பார்கள்.
எனவே பள்ளி, கல்லுாரியில் பயிலும் தடகள வீரர்கள் மற்றும் விளையாட்டு சங்கங்களில் பயிற்சி பெரும் இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.
விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் வயது சான்றிதழ் மற்றும் தங்கள் பள்ளி உடற்கல்வி ஆசிரியருடன் வரும் 28ம் தேதிக்குள் தனி தகவல் படிவமும், பள்ளி கல்லுாரிக்கான படிவத்தையும் பூர்த்தி செய்து ஜோலார்பேட்டை யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தங்களது வருகையை பதிவு செய்து கொள்ள வேண்டும் அல்லது tdaa635601@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு போட்டியில் பங்கு பெரும் விளையாட்டு வீரர்களின் விவரங்களை அனுப்பி வைக்கலாம்.
மேலும் போட்டியில் பங்கு பெரும் வீரர்கள் தங்களது பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, வயது சான்றிதழ் மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அனைத்தும் கொண்டு வர வேண்டும்.
குறிப்பாக ஒருவர் இரண்டு போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.ஓரே பள்ளியில் இருந்து ஒரு போட்டிக்கு இரண்டு நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்.
28ம் தேதிக்கு பிறகு வரும் வருகை படிவங்கள் ஏற்கப்பட மாட்டாது.மேலும் விவரங்களுக்கு 94439 66011 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
Comments
Post a Comment