தாமதம்
ஏசி காம்பார்ட்மெண்டில் ஜெனரேட்டர் பழுதானதால்
பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதம்
ஜோலார்பேட்டை
சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக பெங்களூர் வரை தினமும் இயக்கப்படும் பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல் காலை 7.40க்கு சென்னையில் இருந்து புறப்பட்டு 1.40க்கு பெங்களூர் சென்றடைந்தது. பின்னர் பெங்களூரில் இருந்து
பிற்பகல் 2.50க்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு வழக்கம்போல் ஜோலார்பேட்டை 5வது பிளாட்பாரத்துக்கு வந்து சேர்ந்தது.பின்னர் சிறிது நேரம் கழித்து ரயில் அங்கிருந்து புறப்பட தயாரான போது அந்த ரயிலின் ஏசி கம்பார்ட்மெண்டில் ஏசி வேலை செய்யவில்லை எனக்கூறி பயணிகள் திடீரென ரயிலில் இருந்து கீழே இறங்கி ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து ரயில் பயணிகள் கூறுகையில், பெங்களூரில் இருந்து புறப்படும் போது ஏசி கம்பார்ட்மென்டில் ஏசி வேலை செய்யவில்லை. ஏசி காம்பார்ட்மென்ட் என்பதால் அனைத்து ஜன்னல்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட ஏசி காம்பார்ட்மெண்டில் வெளிக்காற்று வந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
இதன் காரணமாக பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இது குறித்து அதே ரயிலில் பயணம் செய்த டிடிஆரிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதற்கு அவர் ஜோலார்பேட்டையில் கம்பார்ட்மெண்டில் உள்ள ஏசி சரிபார்க்கப்படும் என தெரிவித்தார்.ஆனால் ரயில் ஜோலார்பேட்டைக்கு வந்து நின்றது.ஆனால் அதற்கான நடவடிக்கை இல்லை என பயணிகள் தரப்பில் கூறினர்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டதற்கு,
சம்பந்தப்பட்ட ஏசி கம்பார்ட்மெண்ட்டில் ஜெனரேட்டர் பழுதானதால் ஏசிக்கு போதிய மின்னழுத்தம் கிடைக்கவில்லை.இதனால் ஏசி வேலை செய்யவில்லை.இது குறித்து ரயில்வே மெக்கானிக்கல் பிரிவு ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜெனரேட்டர் சீரமைக்க முடியவில்லை.
மேலும் ஏசி கம்பார்ட்மெண்டில் பயணம் செய்த பயணிகள் சிலரை அதே வேறொரு கம்பார்ட்மெண்டிலும், மற்ற சிலரை சென்னை நோக்கி சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. இதன் காரணமாக பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 2 மணி நேரமும், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டது.
இதனால் மற்ற ரயில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
Comments
Post a Comment