கைது

போலி டாக்டர்
3 பேர் கைது



வேலுார், அக்.
வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வீட்டில் கிளினிக் நடத்திய  போலி டாக்டர் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத்துறையினர் இன்று திமிரியில் போலி டாக்டர் ஒழிப்பு ரோந்து பணியில்  ஈடுபட்டனர். அப்போது தாமரைப்பாக்கம் பாஷா, 38, காவனுார் இளங்கோ, 47, ஆகியோர்
இரண்டாம் வகுப்பு படித்து விட்டு  எம்.பி.பி.எஸ்., என போர்டு போட்டுக்கொண்டு திமிரியில் உள்ள வாடகை வீட்டில் கிளினிக் நடத்தி வைத்தியம் பார்த்துக்கொண்டிருப்பது தெரியவந்தது. சுகாதாரத்துறையினர் அந்த கிளினிக்குகளை மூடி சீல் வைத்தனர். புகார்படி திமிரி போலீசார் போலி டாக்டர்களான அவர்களை கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர். வேலுார் மாவட்டம், ஒடுக்கத்துார் அருகே கீழ்கொத்துார் பகுதியில் 3 ம் வகுப்பு படித்து விட்டு எம்.பி.பி.எஸ்., எம்.டி., என வீட்டில் போர்டு மாட்டிக்கொண்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் திருப்பதி, 47, என்பவரை வேப்பங்குப்பம் போலீசார் கைது செய்து வேலுார் சிறையில் அடைத்தனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்