ரத்த தான முகாம்
300 பேர் ரத்ததானம்
செய்தனர்
வேலுார், அக்
வேலுாரில் நடந்த முகாமில், 300 பேர் ரத்ததானம் செய்தனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு சார்பில், போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு முகாம் மற்றும் ரத்ததான முகாம் வேலுாரில் நடந்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் திலிபன் தலைமை வகித்தார். வரவேற்பு குழு தலைவர் நாராயணன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் முகாமை தொடங்கி வைத்தார்.
ரத்ததானம் செய்ய 300 பேருக்கு மேயர் சுஜாதா சான்றிதழ் வழங்கினார். தானமாக பெறப்பட்ட ரத்தம் வேலுார் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
வேலுார் தி.மு.க., எம்.எல்.ஏ., கார்த்திகேயன், தாசில்தார் செந்தில், ரெட்கிராஸ் சங்க செயலாளர் ஜனார்த்தனன், மார்க். கம்யூ., மாவட்ட செயலாளர் தயாநிதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Comments
Post a Comment