கைது
ரயிலில் 18 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது; ஐடி நிறுவன ஊழியர்களுக்கு சப்ளை செய்ய எடுத்து வந்ததாக விசாரணையில் தெரிந்தது
ஜோலார்பேட்டை,அக்.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், ரயில்களில் கஞ்சா மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா ,ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் கடத்துவதை தடுக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் இருந்து பெங்களூர் வரை செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று அதிகாலை ஜோலார்பேட்டைக்கு வந்தது. அப்போது அந்த ரயிலின் எஸ்-6 காம்பார்ட்மெண்டில் ஆய்வு மேற்கொண்ட போது, அதில் சந்தேகத்தின் பேரில் இருந்த பயணி ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், ஒடிசா மாநிலம் சந்தனப்பூர் பகுதியை சேர்ந்த கைலாஷ் பிஸ்வால்(46). என்பதும், இவர் 18 பண்டல்களில் 18 கிலோ கஞ்சா ரயிலில் கடத்தி வந்தது தெரிந்தது.மேலும் இவர் புவனேஸ்வரில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, பெங்களூரில் உள்ள ஐடி நிறுவன ஊழியர்களுக்கு சப்ளை செய்வது விசாரணை தெரிந்தது.பின்னர் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து,
கைலாஷ் பிஸ்வாலை கைது செய்தனர். முன்னதாக அவர் கடத்தி வந்த 18 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
Comments
Post a Comment