கைது
18 கிலோ கஞ்சா கடத்தியவர்
கைது
ஜோலார்பேட்டை, அக்.
ஜோலார்பேட்டை வந்த ரயிலில் 18 கிலோ கஞ்சா கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் இன்று அதிகாலை 2:00 மணிக்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒடிசா மாநிலம், புவனேஸ்வரிலிருந்து கர்நாடகா மாநிலம், பெங்களூரு வரை செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது. அந்த ரயிலில் எஸ் 6 முன்பதிவு செய்த பெட்டியில் சந்தேகத்திற்கிடமான நபரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர், ஒடிசா மாநிலம், சந்தனப்பூர் பகுதியை சேர்ந்த கைலாஷ் பிஸ்வால், 46, என்பதும், இவர் வைத்திருந்த பையில் 18 கிலோ கஞ்சா இருந்தது, பெங்களூருவில் பணியாற்றும் ஐ.டி., ஊழியர்களுக்கு விற்பனை செய்ய கடத்திச் செல்வது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Comments
Post a Comment