கைது
போலி டாக்டர்கள்
8 பேர் கைது
திருப்பத்துார், அக்.
திருப்பத்துார் மாவட்டத்தில், போலி டாக்டர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டத்தில், போலி டாக்டர்கள் கிளினிக் நடத்தி வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் மூன்று டி.எஸ்.பி., க்கள், ஐந்து இன்ஸ்பெக்டர்கள், 25 போலீசார் அடங்கிய குழுவினர் இன்று மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள கிளினிக்குகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், ரங்கநாதவலசை பகுதியை சேர்ந்த அப்துல்லா, 50, வேலு, 40, குரிசிலாப்பட்டு உமா சரஸ்வதி, 45, வடுகமுத்தப்பட்டி சென்னம்மாள், 40, திம்மாம்பேட்டை மணி, 45, சண்முகசுந்தரம், 34, வீரங்குப்பம், ஜெயபால், 60, பாலகிருஷ்ணன், 65, ஆகியோர் ஐந்தாம் வகுப்பு வரை படித்து விட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர்கள் என தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.
Comments
Post a Comment