கைது
ரூ 2,500 கொடுத்தால்
50 ஆயிரம் ரூபாய் கடன்
தருவதாக மோசடி செய்தவர்
கைது
வாணியம்பாடி, அக்.
வாணியம்பாடியில், 2,500 ரூபாய் கொடுத்தால் 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறி ஏராளமானோரிடம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர், விக்னேஷ், 25. இவர் செட்டியப்பனுார் பகுதியில், அட்சயம் என்ற மகளிர் சுய உதவிக்குழுவை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினார்.
பின்னர் 2,500 ரூபாய் முன்பணம் கொடுத்தால், 50 ஆயிரம் ரூபாய் வங்கியின் கடன் பெற்று தருவதாக கூறினார். இதை நம்பி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மற்றும் மகளிர் குழுக்களை சேர்ந்தவர்கள் இவரிடம் பணத்தை கொடுத்தனர். ஆனால் யாருக்கும் கடன் வரவில்லை.
பணம் கொடுத்தவர்கள் கேட்டதற்கு விக்னேஷ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 1 ம் தேதி திருப்பத்துார் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தனர்.
விசாரணையில், திருப்பத்துாரில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் கலெக்டர் ஏஜெண்ட்டாக பணியாற்றி வந்ததாகவும், பிறகு மகளிர் குழுவை துவக்கி திருப்பத்துார், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி பகுதிகளில் 2,500 ரூபாய் பெற்றுக்கொண்டு கடன் கொடுக்காமல் ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து விக்னேசை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
Comments
Post a Comment