பறிமுதல்

திருப்பத்துார்
மதுவிலக்கு அமலாக்க பிரிவு
அலுவலகத்தில் சோதனை
ரூ 1.10 லட்சம் பறிமுதல்



திருப்பத்துார், அக்.
திருப்பத்துார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி கணக்கில் வராத 1.10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்துார் டாஸ்போஸ்கோ நகரில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகம் உள்ளது. இங்கு ஜெயந்தி, 48, என்பவர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். தீபாவளியையொட்டி, கணிசமான தொகையை அன்பளிப்பாக வழங்க வேண்டும் என சாராய வியாபாரிகளை இவர் வற்புறுத்தியதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து திருப்பத்துார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் கவுரி தலைமையில் ஐந்து பேர் கொண்ட  குழுவினர் இன்று இரவு 6:30 மணிக்கு இங்கு அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
போலீசாரை பார்த்ததும் சாராய வியாபாரிகள் தப்பியோடினர். இரவு 9:00 மணி நிலவரப்படி இன்ஸ்பெக்டர்  ஜெயந்தி கைப்பையில் வைத்திருந்த கணக்கில் வராத ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சோதனை மற்றும் ஜெயந்தியிடம் விசாரணை நடந்து வருகிறது.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்