வரவேற்பு

அண்ணா எழுப்பிய கோபுரம்
அதன் அடியில் கிடக்கும் செங்கல் நான்
அமைச்சர் துரைமுருகன்




வேலுார், அக். 
அண்ணா எழுப்பிய கோபுரம், அதன் அடியில் கிடக்கும் செங்கல் நான் என அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
இரண்டாவது முறையாக தி.மு.க., வின் பொதுச் செயலாளாக அமைச்சர் துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். வேலுார் மாவட்டம்,  காட்பாடி ரயில்வே ஸ்டேஷனுக்கு  இன்று காலை வந்த அவருக்கு தி.மு.க., வினர்  வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து  திறந்த ஜீப்பில் காட்பாடி சித்துார் பஸ் ஸ்டாண்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துரைமுருகனுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன் வெள்ளி செங்கோல் கொடுத்து வரவேற்றார். அப்போது அவர் பேசியதாவது: மாணவர் பருவத்தில்  இந்த இயக்கத்தின் மீது எனக்கு பிடிப்பு ஏற்பட்டது. இதனால் 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் முழுவதும் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. மாணவரணி  துணை பொது செயலாளர், தலைமை நிலைய செயலாளர் என பல பொறுப்புக்களை கருணாநிதி எனக்கு கொடுத்தார்.
அவரது மகன் எனவக்கு பொதுச் செயலாளர் பதவி கொடுத்துள்ளார். இது மிகப்பெரிய பதவி. பொதுச் செயலாளர் பதவி  அண்ணா, நாவலர், பேராசிரியர் ஆகியோர் எழுப்பிய கோபுரம். அதன் அடியில்  கிடக்கும் செங்கல் நான். எனக்கு இந்த பதவி கிடைத்துள்ளது கழகத்திற்காக யார் உண்மையாக உழைத்தாலும் பலன் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் துரைமுருகனுக்கு வரவேற்பு கொடுத்ததால், வேலுார்– காட்பாடி மார்க்கத்தில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்