சோதனை

கே.வி. குப்பம் சப் ரிஜிஸ்டர்
அலுவலகத்தில் விஜிலன்ஸ் சோதனை



வேலுார், அக். 
கே.வி. குப்பம் சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, கணக்கில் வராத 57 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
வேலுார் மாவட்டம், கே.வி. குப்பம் சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில், தீபாவளியையொட்டி இடைத்தரகர்களிடம் வசூல் வேட்டை நடப்பதாக தகவல்கள் வந்தன. இதையடுத்து வேலுார் மாவட்டம், லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையில் ஏழு பேர் இன்று காலை 5:00 மணியலிருந்து நேற்று அதிகாலை 2:00 மணி வரை சோதனை நடத்தினர்.
இதில், பத்திரப்பதிவு அலுவலர் வேலுாரை சேர்ந்த சிவக்குமார், 50, என்பவர் பையில் வைத்திருந்த  கணக்கில் வராத 57 ஆயிரத்தி 400 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்