ஒப்பந்தம்

வி.ஐ.டி., டோகோ நாட்டின்
கல்வி நிறுவனங்கள்  இடையே
புரிந்துணர்வு ஒப்பந்தம்



வேலுார், அக். 
வி.ஐ.டி., டோகோ நாட்டின் கல்வி நிறுவனங்கள்  இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
வி.ஐ.டி., பல்கலைக்கழகம் மற்றும் டோகோ நாட்டின் அரசு கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்புக்கள் மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் வேலுார் வி.ஐ.டியில் செய்யப்பட்டுள்ளது. இதில் டோகோ நாட்டின் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிகளுக்கான அமைச்சர் அய்ேஹா வட்டேபா, வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன் ஆகியோர் கையேழுத்திட்டனர்.
இதனால் வி.ஐ.டி., டோகோ நாட்டின் அரசு கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் பரிமாற்றம், கூட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். டோகோ நாட்டின் துாதரக அதிகாரி யானோ ஆக்பேமாடோ, வி.ஐ.டி., துணைத்தலைவர்கள் சங்கர், செல்வம், இணை துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் ஜெயபாரதி ஆகியோர் பங்கேற்றனர்.

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை