திறப்பு
ஆட்டோ நுாலகம்
திறப்பு
வேலுார், அக்.
வேலுாரில், ஆட்டோவில் நுாலகம் திறக்கப்பட்டது.
வேலுார் மாவட்டம், காட்பாடி ஆக்சிலியம் கல்லுாரியில் நாட்டு நலப்பணிகள் திட்டம் சார்பில் நடமாடும் ஆட்டோவில் நுாலகம் திறப்பு விழா இன்று நடந்தது. சிறைத்துறை டி.ஐ.ஜி., செந்தாமரைக்கண்ணன் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: மண்ணில் மரங்களை விதைப்பது போல மக்கள் மனதில் நல்ல எண்ணங்களை புத்தகங்கள் விதைக்கும். ஆட்டோவில் பயணிக்கும் போது சில நிமிடங்களாவது பயணிகள் புத்தகங்களை படிப்பதனால் மன மாற்றம் ஏற்படும். முதல் கட்டமாக 10 ஆட்டோவில் நுாலகம் திறக்கப்பட்டுள்ளது.
விரைவில் 100 க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் நுாலகம் திறக்கப்படும். ஒரு ஆட்டோவில் 50 புத்தகம் வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment