கூட்டம்
ராணிப்பேட்டைமாவட்டம்
சோளிங்கர் புலிவளம் கிராமத்தில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் சிறப்பு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் திருமால் தலைமையில் நடைபெற்றது. இதில் சமூக தணிக்கை அலுவலர் சித்தீக்கான் கலந்து கொண்டு இரண்டு ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் கணக்குகள், பணியாளர்கள் பதிவேடு, என்னென்ன பணிகள் எவ்வளவு தொகையில் பணிகள் செய்யப்பட்டன என தணிக்கை செய்தார். மேலும் 100 நாள் பணியில் பணியாளர்கள் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படுகின்றன கேட்டு அறிந்தார். அப்போது ஒன்றிய கவுன்சிலர் வார்டு உறுப்பினர்கள் வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள் இதனால் ஆத்திரம் அடைந்த ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாகக்உ வாதம் 20 நிமிடங்கள் நிடித்தது. இதனால் கூட்டம் பாதிலேயே முடிவு பெற்றது அனைவரும் கலைந்து சென்றனர்.
Comments
Post a Comment