அண்ணாமலையார் தரிசனம்
அருணாசலேசுவரர் தரிசனத்திற்கு
5 மணி நேரம் காத்திருப்பு
அருணாசலேசுவரர் தரிசனத்திற்கு 5 மணி நேரம் பக்திர்கள் காத்திருந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த நவ மாதம் 27 ம் தேதி கார்த்திகை தீபம் விழா கொடியேற்றப்பட்டது. டிச. 6 ம் தேதி மாலை தீபம் ஏற்றப்பட்டது. தீப விழா தொடங்கியது முதல் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து பக்தர்கள் தினசரி தரிசனத்திற்கு வருகின்றனர். தற்போது பள்ளி, கல்லுாரிகள் தொடர் விடுமுறையாததாலும், நேற்றும் சனி, இன்று ஞாயிறு வார விடுமுறை மற்றும் அய்யப்ப பக்தர்கள் சீசன் என்பதாலும் அருணாசலேஸ்வரை தரிசிக்கவும், கிரிவலம் செல்லவும் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.
நேற்று 4 லட்சம் பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசித்தனர். இன்று 5 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். இதனால் அண்ணாமலையாரை தரிசிக்க 5 மணி நேரம் காத்திருந்தனர். கிரிவலம் செல்ல 10 மணி நேரம் ஆனது. இதனால் திருவண்ணாமலைக்கு செல்லும் பஸ்கள் நிரம்பி வழிகிறது. கார்கள் அதிகளவு வருகின்றது. குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா பக்தர்கள் அதிளகவு வந்தனர்.
Comments
Post a Comment