விழா
திருப்பத்தூர்மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட அளவிலான கலை விருதுகள் வழங்கும் விழா மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கலை பண்பாட்டு துறையின் சார்பில் கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட அளவிலான கலை விருது வழங்கும் விழா இளம் கலைஞர்களுக்கான மாவட்ட அளவிலான கலைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு வழங்கும் விழா மற்றும் மாவட்ட கலை விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.வளர்மதி பங்கு பெற்று விருதுகளும் சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளை வழங்கினார்.
66 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கான கலை முதுமணி விருது 51 வயது முதல் 65 வயது குட்பட்டவருக்கான கலை நன்மணி விருது 35 வயது முதல் 50 வயது உட்பட்டவர்க்கான கலைச்சுடர் மணி விருது 19 வயது முதல் 35 வயது உட்பட்ட அதற்கான கலை வளர்மணி விருது 18 வயதுக்குட்பட்டோருக்கான கலை இளமணி விருது என மொத்தமாக 15 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
இளம் கலைஞர்களின் கலை திறமைகளை வெளிக் கொணரும் வகையில் 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்களுக்கு குரல் இசை பரதநாட்டியம் ஓவியம் கிராமிய கலைகள் மற்றும் இசைக்கருவிகள் இசைத்தல் ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகளும் காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் திருப்பத்தூர் மாவட்ட கலைஞர்களின் தப்பாட்டம் கிராமிய கலை நாடகம் மற்றும் தெருக்கூத்து ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Comments
Post a Comment