பேட்டி

ராணிப்பேட்டைமாவட்டம்  
 

பொங்கலுக்கு திட்டமிட்டபடி வேட்டை சேலைகள் வழங்கபடும் அதில் எந்த மாறுபாடும் கிடையாது - தனியாரிடம் வேட்டி சேலைகள் கொள்முதல் செய்யும் திட்டமே கிடையாது ராணிப்பேட்டையில் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் காந்தி பேட்டி 


  ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் சார்பாக பதிவு பெற்ற கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 3577 பயனாளிகளுக்கு ரூபாய் 81 லட்சம் மதிப்பீட்டில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கலந்து நல திட்ட உதவிகளை பெற்றுக் கொண்டனர் இதில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்
     பின்னர் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் காந்தி கூறுகையில் நாங்கள் இலவச வேட்டி சேலைகள் குறித்து ஆய்வு செய்தோம் தமிழக முதல்வரும் ஆய்வு செய்துவிட்டார் நாங்கள் அனைவருக்கும் இலவச விலையில்லா வேட்டி சேலைகளை வழங்குவோம் இன்றைக்கு நாங்கள் சவால்விட்டு சொல்கிறோம் சேலைகளை வேட்டிகளை வேண்டுமானால் ஆய்வு செய்யுங்கள் இப்போது எப்படி வேட்டி சேலை இருக்கிறது கடந்த ஆட்சியில் எப்படி இருக்கிறது என பாருங்கள் அண்ணாமலை சொன்னார் இது தனியாருக்காக என தனியாருக்கு கொடுப்பது என்பதும் தவறான கருத்து 10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட மேம்பாடு செய்துள்ளோம் வேட்டி சேலை திட்டத்தில் அனைவருக்கும் வேட்டி சேலைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார் '

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்