கைது
ராணிப்பேட்டைமாவட்டம்
ஆற்காடு அருகே நெல் கொள்முதல் முறைகேடு வழக்கில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த விஏஓ பால சுப்பிரமணியனை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
ராணிப்பேட்டைமாவட்டம்,ஆற்காடு அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் விவசாயிகளின் நலனுக்காக கிராமப்புறங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்கப்பட்டது இதன் மூலம் விவசாயிகள் விளைவித்த நெல் மூட்டைகளை விற்பனை செய்து அதற்கான தொகையை வங்கி மூலம் பெற்று வந்துள்ளனர்.மேலும் விவசாயிகள் அல்லாத வியாபாரிகள் சிலர் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் துணையோடு பல்வேறு முறைகேடில் ஈடுபட்டு வந்ததாகவும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பலகோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும், மாவட்ட குற்றப்பிரிவு புலனாய்வு போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன.அதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் இது தொடர்பாக சுமார் ஆறு முதல் ஏழு கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்தது இந்த தீவிர விசாரணையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், தக்கோலம், சோளிங்கர் உட்பட பல்வறு பகுதிகளில் நேரடி கொள்முதல் நிலையங்களில் அரசியில் கட்சியின் பிரமுகர்கள் பலர் முறைகேடில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 30 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இந்த வழக்கில் ஆற்காடு தாலுகா உட்பட்ட கத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்த விஏஓ பாலசுப்பிரமணியன் என்பவரையும் ரகசியமாக கண்காணித்து வந்த குற்றப்பிரிவு போலீசார் அவரின் செல்போன் எண்ணையும் கண்காணிக்கப்பட்டது. மேலும் அவரும் இந்த தொடர்புடையாக தெரியவந்ததை தொடர்ந்து நேற்று விஏஒ பாலசுப்பிரமணியனை வேலூர் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நெல் கொள்முதல் முறைகேடு வழக்கில் மேலும் பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
Comments
Post a Comment