அவலம்
திருப்பத்தூர்மாவட்டம்
சந்தன மாநகரம் என்று அழைக்கப்படும் திருப்பத்தூர் குப்பை கிடங்காக மாறும் அவலம்! பன்றிகள் காண்டாமிருகம் சைஸ் உள்ளது. நாய்கள் சாலை மறியல் பண்ணுது. கவுன்சிலர் குற்றச்சாட்டு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளின் நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் தலைமையில் கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது.அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் திருப்பத்தூர் மாவட்டம் சந்தன மாநகரம் என்று அழைக்கப்பட்டது ஆனால் தற்போது மிகவும் சீர்கெட்டு குப்பை கூடாரமாக மாறி வருகிறது. மேலும் திருப்பத்தூர் நகர பகுதிகளில் நாய் மற்றும் பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்கள் சாலை மறியல் பண்ணுது பன்றிகள் காண்டாமிருகம் சைஸ் உள்ளது எனவும் கூறியதால் நகர மன்ற கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.
திருப்பத்தூருக்கென தனி வரலாறு உண்டு ஆனால் தற்போது மிகவும் சீர்கேட்டு ஆங்காங்கே குப்பைகளை கொட்டி மிகவும் அசுத்தமாக காணப்படுகிறது என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
Comments
Post a Comment