திருவிழா
திருப்பத்தூர்மாவட்டம்
வருடத்தின் கடைசி வெள்ளிக்கிழமையொட்டி செயற்கையாக புற்று எழுப்பி ஆம்பூரில் நடைப்பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் கோவில் திருவிழா.. 47 ஆண்டுகளாக தொடர்ந்து ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கிய விழாக்குழுவினர்..
திருப்பத்தூர் மாவட்டம்..ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோவில் 2022 ஆம் ஆண்டு கடைசி வெள்ளிக்கிழமையொட்டி 47 ஆம் ஆண்டு பவானி அம்மன் பெருவிழா நடைப்பெற்றது.. இத்திருவிழாவையொட்டி காலை பொழுதில் கோவில் வளாகத்தில் செயற்கையான புற்று எழுப்பி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் ஆராதனைகள் நடைப்பெற்றது.. அதனை தொடர்ந்து மதியம் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோருக்கு கோவில் விழாக்குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.. மேலும் இந்த ஆலயத்தில் தான் ஆம்பூர் பகுதியில் முதன் முதலாக அன்னதானம் துவக்கி வைக்கப்பட்டு தொடர்ந்து 47ஆண்டுகளாக தொடர்ந்து ஆன்மீக இளைஞர்களால் ஆண்டுதோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment