மெமோ
ஆக்கரமிப்புகளை அகற்றாத
அணையர், டி.எஸ்.பி., க்கு மொமோ
திருப்பத்துார், டிச.
திருப்பத்துாரில், ஆக்கரமிப்புகளை அகற்றாத
அணையர், டி.எஸ்.பி., க்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா மொமோ வழங்கினார்.
திருப்பத்துார் நகராட்சியில் பஸ் ஸ்டாண்டு, புதுப்பேட்டை சாலை, ஜின்னா சாலை ஆகிய பகுதிகளில் சாலையில் நடைபாதை கடைகள், தள்ளு வண்டிகள் அதிகம் உள்ளதால், பொது மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆந்த பகுதியில் ஆய்வு செய்த போது ஏராளமான கடைகள் சாலையை ஆக்கரமித்துள்ளது தெரியவந்தது. இவற்றை உடனடியாக அகற்றும்படி திருப்பத்துார் நகராட்சி ஆணையர் ஜெயராம் ராஜா, டி.எஸ்.பி., கணேசன் ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வஹா உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் ஆக்கரமிப்புக்களை அகற்றவில்லை. இதனால் அவர்களுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா இன்று மெமோ வழங்கினார்.
Comments
Post a Comment