ஆர்பாட்டம்
கண்டன ஆர்ப்பாட்டம்!
காங்கிரஸ் பரம்பரையிலிருந்து வந்த முதுபெரும் காங்கிரஸ்காரர் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய திரு.A.M.முனிரத்தினம் அவர்கள் தொகுதி மக்களின் குறைகளை சோளிங்கரில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளிடம் வினா எழுப்பினார் குறிப்பாக சோளிங்கர் அருள்மிகு லஷ்மி நரசிம்ம திருக்கோவிலுக்கான ரோப் கார் வசதி திட்டம் நீண்ட நாட்களாக முழுமை அடையாமல் இருக்கின்றது எப்பொழுது அதை செயல்பாட்டுக்கு கொண்டு வரப் போகிறீர்கள் என்று கேட்டார் அதற்கு அதிகாரிகள் பதில் சொல்வதற்கு முன் மாவட்ட அமைச்சர் திடீரென்று எழுந்து சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினரை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து அவமதித்துள்ளார் ஒரு மக்கள் பிரதிநிதியை அதிகாரிகளின் முன்னால் அவமானப்படுத்தியதை காங்கிரஸ் பேரியக்கம் வன்மையாக கண்டிக்கின்றது எனவே வருகின்ற ஜனவரி 3.ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன் மாவட்ட அமைச்சரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது அனைத்து காங்கிரஸ் பேரியக்கத் தோழர்கள் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்
இவண்!
வாலாஜா.J.அசேன்.BABL முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணைத் தலைவர்
Comments
Post a Comment