விபத்து
திருப்பத்தூர்மாவட்டம்
சாலைநகர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து இருவர் படுகாயம். ஜோலார்பேட்டை போலிசார் விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் வயது 55 மற்றும் இவரது மகன் சுரேஷ் வயது 30 ஆகிய இவர்கள் இன்று திருப்பத்தூர் பகுதியில் ஆடு ஒன்றை வாங்கி கொண்டு தங்களது இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூரில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலை நகர் பகுதியில் செல்லும் போது வேலூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த கார் இருச்சக்கர வாகனம் மீது விபத்துக்குள்ளானது.இதில் முருகேசன் மற்றும் சுரேஷ் இருவரும் பலத்த படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஜோலார்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Post a Comment