கைது
ராணிப்பேட்டைமாவட்டம்
சோளிங்கர் கஞ்சாவிற்பனை செய்த இளைஞர் கைது 250கிராம் கஞ்சா பறிமுதல்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கீழாண்ட மோட்டூர் குளக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக சோளிங்கர் போலீசருக்கு கிடைத்தது. தகவல் பேரில் காவல் ஆய்வாளர் முருகானந்தம், உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். குளக்கரை பகுதியில் இருந்த முட்புதர் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர் அப்போது கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது அதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் கீழாண்டமோட்டூர் பகுதியை சேர்ந்த ஆனந்த்பாபு(19) என்பது விசாரணை மில் தெரியவந்தது.அவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Comments
Post a Comment