பொங்கலுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கப்படும் அமைச்சர் காந்தி பேட்டி
பொங்கலுக்கு திட்டமிட்டபடி
வேஷ்டி, சேலைகள் வழங்கப்படும்
அமைச்சர் காந்தி
பொங்கலுக்கு திட்டமிட்டபடி வேஷ்டி, சேலைகள் வழங்கப்படும் என ராணிப்பேட்டையில் அமைச்சர் காந்தி கூறினார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா இன்று நடந்தது. கைத்தறி துறை அமைச்சர் காந்தி 3577 பேருக்கு 81 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இப்போது வேஷ்டி, சேலைகள் எப்படி இருக்கிறது, கடந்த ஆட்சியில் எப்படி இருந்தது என பாருங்கள் என பா.ஜ., அண்ணாமலை சொல்கிறார். நாங்கள் சவால் விட்டு சொல்கிறோம், சேலைகள், வேஷ்டிகளை ஆய்வு செய்யுங்கள், 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மேம்பாடு செய்துள்ளோம்.
இதை நாங்களும் ஆய்வு செய்து விட்டோம், தமிழக முதல்வரும் ஆய்வு செய்து பாராட்டு தெரிவித்துள்ளார். தனியாரிடம் வேஷ்டி, சேலைகள் கொள்முதல் செய்யும் திட்டமே கிடையாது. பொங்கலுக்கு திட்டமிட்டபடி வேஷ்டி, சேலைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன். குமார் உடனிருந்தனர்.
Comments
Post a Comment