ராணிப்பேட்டை குடியரசு தின விழா
ராணிப்பேட்டை
மாவட்டத்தில்
குடியரசு தினவிழா
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டத்தில், நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் தேசியகொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீசார் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் 18 அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள், டாக்டர், போலீசார் என 826 பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் 21 போலீசாருக்கு முதலமைச்சர் பதக்கங்களை அவர் வழங்கினார். தொடர்ந்து 221 பேருக்கு ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விழாவில் எஸ்.பி., தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Comments
Post a Comment