திருப்பத்தூர் குடியரசு தின விழா

திருப்பத்துார்
மாவட்டத்தில்
குடியரசு தினவிழா




திருப்பத்துார், ஜன. 
திருப்பத்துார் மாவட்டத்தில்,  நடந்த குடியரசு  தினவிழாவில் கலெக்டர் அமர்குஷ்வாஹா தேசியகொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
திருப்பத்துார் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா,  திருப்பத்துார் பாச்சல் ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நடந்தது.  மாவட்ட  கலெக்டர் அமர் குஷ்வாஹா தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து 129 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 44 லட்சம் ரூபய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள்  வழங்கினார்.  சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள், கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
விழாவில் எஸ்.பி., பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, திருப்பத்துார் கோட்டாச்சியர் லட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா, வேளாண்மை இணை இயக்குனர் பாலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்