சபாஷ்
*வேலூர் மாவட்டத்தில் ஆன்லைனில் ரூ.1,35,087 பணத்தை இழந்த பெண் மருத்துவ நிபுணரின் பணம் முழுவதும் மீட்கப்பட்டு சைபர் கிரைம் போலீசார் மூலம் உரியவரிடம் ஒப்படைப்பு*
வேலூர் மாவட்டத்தில் வேலூர் CMC மருத்துவ வளாகத்தில் பணிபுரியும் *பெண் மருத்துவ நிபுணர்* ஒருவருக்கு செல்போனில் SBI Net banking முடக்கபட்டுள்ளதாகவும் அதனால் உடனே PAN card update செய்ய வேண்டுமென வந்த SMS-ல் இருந்த லிங்க் கிளிக் செய்து வங்கி தொடர்பான விவரங்களை அதில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் சைபர் திருடர்கள் அவரது வங்கி விவரங்களை தெரிந்து கொண்டு அவரது வங்கி கணக்கிலிருந்து 3 தவணைகளில் *ரூபாய் 1,35,087* பணத்தை அபகரித்து விட்டதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த வேலூர் சைபர் கிரைம் போலீசார் இவர்கள் இழந்த *ரூ.1,35,087/-* பணத்தை மீட்டு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.ராஜேஸ் கண்ணன் IPS* அவர்களின் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்டம் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் *திரு.D.குணசேகரன்* அவர்கள் முன்னிலையில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் அவர்கள் பேசுகையில் Call, SMS or link வாயிலாக வங்கி விவரங்களை பகிர கூடாது எனவும், *ஆன்லைனில் லோன் தருவதாக சொல்லும் செயலிகளை (Apps)* பதிவிறக்கம் செய்து பிரச்சனைகளில் மாட்டிகொள்ளாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் மேலும் *வங்கிகளின் தொடர் விடுமுறை நாட்களை பயன்படுத்தி சைபர் கிரிமினல்கள் பொது மக்களை அதிகம் ஏமாற்றக் கூடும்* எனவும் இவ்வாறு சைபர் குற்றங்களால் யாரேனும் பாதிக்கப்பட்டால் உடனடியாக *1930* என்ற இலவச உதவி எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
Comments
Post a Comment