விழா


குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும்
வி.ஐ.டி வேந்தர் விசுவநாதன் பேச்சு
வேலூர், ஜன.
தமிழியக்கம் சார்பில் சுரும்பியனின் இசைத்தமிழ், குறள்நெறி ஆகிய நூல்கள் வெளியிட்டு விழாவும், தமிழ்நாடு அரசின் தமிழ் செம்மல் விருது பெற்ற புலவர் ம.நாராயணன், கவிஞர்கள் ம.சோதி,  மானூர் புகழேந்தி ஆகியோருக்கு பாராட்டு விழாவும் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நடந்தது.
விழாவிற்கு தமிழியக்க நிறுவனர், தலைவர், வி.ஐ.டி.வேந்தருமான கோ. விசுவநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது;
உலகில் உள்ள மக்கள் 7,100 மொழிகள் பேசுகின்றனர்.இதில் இந்தியாவில் உள்ள தமிழ், சமஸ்கிருதம் ஆகியவை உள்பட 7 மொழிகள் மட்டுமே பழமையானது ஆகும். இதில் சில மொழிகள் வழக்கிலும், சில மொழிகள் எழுத்து, பேச்சு வடிவிலும் உள்ளன. இன்று வரை இளமை மாறாமல் உள்ள மொழி நமது தமிழ் மொழி தான். நமது தமிழ் மொழிக்கு இருக்கிற பெருமை வேறு எந்த மொழிக்கும் கிடையாது. தமிழ் மொழிக்காகவும், தமிழர்களின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் பாடுபடுவது தான் தமிழ் இயக்கம்.
உயர்கல்வியில் இந்தியா 27 சதவீதம் உள்ளது. தமிழ்நாடு 50 சதவீதம் உள்ளது. உயர் கல்விக்கு  முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால் பொருளாதாரத்திலும் நாடு வளர்ச்சி அடையும்.
தமிழறிஞர்கள் பல பேர் முன்பு வறுமையில் வாடினர்.  தமிழ்நாட்டில் இனி அந்த நிலை வரக்கூடாது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நன்றாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
 தமிழ்நாடு அரசின் தமிழ் செம்மல் விருது பெற்ற புலவர் நாராயணன் தன்னுடைய பிள்ளைகள், பேரக்குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டியுள்ளார். அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பே பெரியாரைப் பற்றி ஆராய்ச்சி செய்து நூலை வெளியிட்டு தமிழுக்கு சேவை செய்துள்ளார்.
அனைவரும் தங்களுடைய குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும்.
இவர் அவர் பேசினார்.
விழாவில் பூங்குன்றன், மத்திய பல்கலைகழக பேராசிரியர் செங்கதிர், தமிழியக்க இசை, நாடக அணி மாநில ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி சுப்பிரமணி, ஊடக அணி ஒருங்கிணைப்பாளர் அருள் செல்வன், நூலாசிரியரின் மனைவி சுந்தரவல்லி சுரும்பியன் ஆகியோர் பேசினர். முன்னதாக மாநில செயலாளர் சுகுமார் வரவேற்றார். முடிவில் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.
விழாவில் தமிழியக்க வேலூர் மாவட்ட செயலாளர் ஜெயகர், கேரளா கலாசமிதி ராதாகிருஷ்ணன், செஞ்சி சிவா, கணியம்பாடி ஒன்றிய கவுன்சிலர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்