சோகம்

நெமிலிசுற்றுவட்டாரத்தில்  புதியபூஞ்சை தாக்கம்  நெற்பயிர்கள் நாசம்.
விவசாயிகள் விரக்தி. 

இராணிப்பேட்டை, ஜன,
ராணிப்பேட்டை மாவட்டம்  நெமிலி,
பனப்பாக்கம் மற்றும் காவேரிப்பாக்கம்
அது சுற்றுவட்டாரமக்களின்  முக்கிய வாழ்வாதாரம்   விவசாயமாகும் .
அப்பகுதிகளில்  குறுவைசாகுபடியாக  விவசாயிகள் 
நெல் நடவுசெய்துள்ளனர் .
இந்நிலையில் தற்போது  அதிகமான மூடுபணி காரணமாக  ஒருசில ரக நெற்பயிர்களில்  புதுவிதமான  சிவப்பு பூஞ்சை 
தாக்கம் அதிகமாகி பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்பட்டுள்ளது 
மேலும் பயிரின் இலைகள்  பசுமையின்றி   சிவப்பாகவே உள்ளது  இவ்விதமான  
நோய் தாக்கத்தை கண்டுஅப்பகுதி 
விவசாயிகள்  பயிர்களை மீட்க வழியின்றி உள்ளதாகவும் ஏற்கனவே மருந்து உரம் மற்றும் இடுபொருள்   செலவுகள் அதிகமாக செலவழித்து
நெல் விலை குறைவாக உள்ளநிலையில்  இவ்விதமான புதியநோய் தாக்கம்  மேலும் 
பாதிப்படையவைத்துள்ளதாக விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர் .

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்