பலி
ஆம்பூர் அருகே
பைக்குகள் மோதி
2 பேர் பலி
ஆம்பூர், ஜன.
ஆம்பூர் அருகே, பைக்குகள் மோதி இரண்டு பேர் பலியாகினர்.
வேலுார் மாவட்டம், சைதாப்பேட்டையை சேர்ந்தவர் முகமது காசிம், 26. சென்னை சோழிங்கநல்லுார் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார், 23. மிட்டாய் வியாபாரிகளான இவர்கள் நேற்று இரவு 10:00 மணிக்கு பல்சர் பைக்கில், திருப்பத்துார் மாவட்டம், வணியம்பாடிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆம்பூர் அருகே மின்னுார் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, குடியாத்தம் அடுத்த காரம்பட்டி பகுதியிலிருந்து பின்னால் வந்த யமகா பைக் இவர்கள் மீது மோதியது.
இதில் இரு பைக்குகளும் கவிழ்ந்தது. விபத்தில் சைதாப்பேட்டை பைக்கில் சென்ற காசிம், அருண்குமார், காரம்பட்டி பைக்கில் சென்ற காரம்பட்டி கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் சசிகுமார், 45, அவரது மகன் சுசில்குமார், 15, உறவினர் மாதனுாரை சேர்ந்த பெருமாள், 35, ஆகியோர் படுகாயமடைந்தனர். ஆம்பூர் தாலுகா போலீசார் இவர்களை மீட்டு வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில், சசிகுமார், பெருமாள் ஆகியோர் இன்று அதிகாலை 3:00 மணிக்கு இறந்தனர். அதிக வேகமாக பைக்கில் சென்றதால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
Comments
Post a Comment