பாதிப்பு
பூஞ்சை நோயால்
நெற்பயிர்கள் பாதிப்பு
ராணிப்பேட்டை, ஜன.
அரக்கோணம் அருகே, பூஞ்சை நோயால் 50 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே, நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 500 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக நெற்பயிர்கள் வளர்ச்சி குன்றி சிவப்பு கலரில் உள்ளது. சிறிது நாளில் நெற்பயிர்கள் காய்ந்து விடுவதால் 50 ஏக்கரில் நெற்பயிர்களை சாகுபடி செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நெமிலி வேளாண்மை விரிவாக்க அலுவலர் ராமன் கூறியதாவது:
இந்த பகுதியில் பூஞ்சை நோயால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் பனிப்பொழிவால் இந்த நோய் வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொண்டு மருந்து பெற்று நெற்பயிரில் தெளித்து நோயின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment