விழா



சட்டத்தை ஒரு பாடமாக
பள்ளிகளில் சேர்க்க வேண்டும்
உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற
தலைமை நீதிபதி



வேலுார், ஜன. 
சட்டத்தை ஒரு பாடமாக பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என   உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ரமணா பேசினார்.
வேலுார் வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில்,  மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலாச்சாரியார் நினைவு தின கருத்தரங்கம் இன்று நடந்தது.  வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன் தலைமை வகித்தார். முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பங்கேற்று ராஜகோபாலாச்சாரியர் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
நமது சட்டம் அன்றாட தேவையாக உள்ளதால் அடிப்படை சட்டத்தை ஒரு பாடமாக பள்ளி, கல்லுாரிகளில் சேர்க்க வேண்டும். 75 ஆண்டுகள் சுதந்திரம் பெற்ற பின்னரும் இந்தியாவில் பெரும்பாலான நீதிமன்றங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. நீதிமன்றத்திற் வரும் மக்களுக்கு காத்திருப்பு அறைகள் இல்லை.  நீதிமன்ற அலுவலர்கள் இல்லை.
நீதிமன்றங்களுக்காக மத்திய அரசு 60 சதவீத நிதியை  தருகிறது.  மாநில அரசுகள் 40 சதவீத நிதியை தர வேண்டும். ஆனால் பல மாநிலங்களில் போதிய நிதியை நீதித்துறைக்கு ஒதுக்குவதில்லை. நீதித்துறையில் அதிகளவு காலிப்பணியிடங்கள் உள்ளது. இதை நிரப்பினால்தான், வழக்குகள் தேக்கமில்லாமல் இருக்கும்.
மாநிலங்களில் அரசு வழங்கறிஞர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. ஏழை மக்களும் குறைந்த செலவில் நீதிமன்றத்தை நாடும் வகையில் நீதிமன்ற கட்டணம்ங்கள் குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். வி.ஐ.டி., துணைத்தலைவர் சேகர், மூத்த வழக்கறிஞர் விஜயராகவலு, முன்னாள் மத்திய அமைச்சர் சண்முகம் பங்கேற்றனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்