சீல் வைக்க உத்தரவு
வேலுார் மாநகராட்சி
1.386 கடைகளுக்கு சீல்
வைக்க கமிஷனர் உத்தரவு
வேலுார், ஜன.
வேலுார் மாநகராட்சியில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாடகை பாக்கி வைத்துள்ள 1,386 கடைகளுக்கு சீல் வைக்க கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
வேலுார் மாநகராட்சியில், சொத்துவரி, தொழில் வரி, குப்பை வரி, குடிநீர் கட்டணம் மற்றும் மாநகராட்சி கடைகளுக்கு வாடகை பாக்கி என மொத்தம் 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாக வேண்டியதுள்ளது. இவற்றை வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாடகை பாக்கி வைத்துள்ள 1,386 கடைகளுக்கு சீல் வைக்க கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இன்று ஆறு கடைகளுக்கு மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் தனசேகரன் சீல் வைத்தார். மற்ற கடைகளுக்கும் விரைவில் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments
Post a Comment