மீட்பு

ஆன்லைனில் இழந்த
மருத்துவ உதவியாளர்
பணம் மீட்பு



வேலுார், ஜன. 
ஆன்லைனில் பணத்தை இழந்த மருத்துவ உதவியாளரின் பணம் மீட்டு ஒப்படைக்கப்பட்டது.
வேலுார் பாரதி நகரை சேர்ந்தவர் ஹீமா, 36. இவர் வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில், மருத்துவ உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மொபைல் போனுக்கு, பேன் கார்டு அப்டேட் செய்ய வேண்டும் என வந்த குருஞ்செய்தியில் வந்த லிங்க்கை கிளிக் செய்து வங்கி குறித்த விவரங்களை அதில் படிவிட்டுள்ளார். இதனால் சைபர் திருடர்கள் அவரது  வங்கி  விவரங்களை தெரிந்து கொண்டு, அவரது வங்கி கணக்கிலிருந்து 2 லட்சம் ரூபாய் திருடிக்கொண்டனர்.
இது  குறித்து ஹீமா கொடுத்த புகார்படி வேலுார் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி, ஒரு லட்சத்தி 99 ஆயிரத்து 999 ரூபாயை மீட்டனர். மீட்கப்பட்ட பணம் வேலுார் மாவட்ட சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., குணசேகரன் முன்னிலையில் ஹீமாவிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. அப்போது ஏ.டி.எஸ்.பி., குணசேகரன் பேசியதாவது: மொபைல் போன், குறுஞ்செய்தி, லிங்க் வாயிலாக வங்கி விவரங்களை பகிர கூடாது, ஆன்லைனில் உலவும் போலியான வேலை வாய்ப்பு விவரங்களை நம்பாமல் விழிப்புடன்  இருக்க வேண்டும். சைபர் குற்றங்களால் யாராவது பாதிக்கப்பட்டால் உடனடியாக  1930 என்ற இலவச உதவி எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்