உத்தரவு
பெண் பஞ்சாயத்து
தலைவரின் கணவர்
தேசியக்கொடி ஏற்றக்கூடாது
கலெக்டர் உத்தரவு
வேலுார், ஜன.
பெண் பஞ்சாயத்து தலைவரின் கணவரோ, உறவினர்களோ தேசியக்கொடி ஏற்றக்கூடாது என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாளை (26) ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தினத்தையொட்டி கிராம சபைக்கூட்டம் நடக்கும் இடம் குறித்து அந்தந்த பஞ்சாயத்தில் வசிக்கும் மக்களுக்கு அறிவிப்பு செய்திட வேண்டும். பஞ்சாயத்து தலைவர் தலைமையில்தான் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும்.
பெண் பஞ்சாயத்து தலைவரின் கணவரோ, உறவினர்களோ தேசியக்கொடி ஏற்றக்கூடாது, கிராம சபை கூட்டத்திற்கு தலைமை வகிக்கக்கூடாது. ஜாதி, மத பாகுபாடின்றி கிராம சபைக்கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment