சைக்கிள் பயணம்
7,500 கி.மீ.,
சைக்கிள் பயணம் செய்த
மாணவி வேலுார் வந்தார்
வேலுார், ஜன.
பெண்கள் முன்னேற்றத்தை வலியுறுத்தி, 7,500 கி.மீ., துாரம் சைக்கிளில் பயணம் செய்த மாணவி வேலுார் வந்தார்.
ம.பி., மாநிலம், பெஷாவரை சேர்ந்தவர் ஆஷாமால்வியா, 24. எம்.ஏ., படித்துள்ள இவர் கடந்தாண்டு நவ., மாதம் 1 ம் தேதி பெண்கள் பாதுகாப்பு, முன்னேற்றத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை பெஷாவரில் தொடங்கினார். இதற்காக நாடு முழுவதும் 28 மாநிலங்களில் 25 ஆயிரம் கி.மீ., துாரம் சைக்கிளில் செல்ல திட்டமிட்டுள்ளார்.
இதுவரை குஜராத், கோவா, கர்நாடகா, கேரளா மாநிலத்திற்கு சென்ற அவர் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கரூர் வழியாக வேலுாருக்கு வந்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்த அவரை வெற்றிகராமாக பயணத்தை முடிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வாழ்த்தினார்.
இது குறித்து ஆஷாமால்வியா கூறியதாவது: இதுவரை 7,500 கி.மீ., பயணம் மேற்கொண்டுள்ளேன். வரும் ஆக., மாதம் 15 ம் தேதி டெல்லியில் பயணத்தை முடிக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment