கூட்டம்
தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் மாநில உயர்நிலைக்குழு கூட்டம் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு
--------------------------------------------------------------------------
தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் மாநில மத்தியக்குழுவின் கூட்டம் தமிழக அரசின் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குநர் அமரேஷ் பூஜாரி அவர்கள் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னதாக சிறைத்துறை துணைத்தலைவர் மற்றும் சங்க செயலாளர் எ.முருகேசன் வரவேற்று பேசினார்.
சங்கத்தின் இயக்குநரும் சிறைத்துறை துணைத்தலைவருமான ஆர்.கனகராஜ் செயல்பாடுகள் குறித்து பேசினார். பொருளாளார் வழக்கறிஞர் எஸ்.ஞானேஸ்வரன் நிதிநிலை அறிக்கையினை சமர்பித்து பேசினார்.
சங்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் மற்றும் மத்திய குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன், வேலூர் சரக சிறைத்துறை துணைத்தலைவர் ஜி.பி.செந்தாமரைக்கண்ணன், மகளிர் சிறை கண்காணிப்பாளர் நீலமணி உள்ளிட்டோர் பேசினர்.
சரக சிறைத்துறை துணைத்தலைவர்கள் கே.ஜெயபாரதி,(திருச்சி), சண்முகசுந்தரம்,(கோவை), பழனி(மதுரை) உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் முதன்மை நன்னடத்தை கண்காணிப்பாளர் சிவபிரசாத், மண்டல நன்னடத்தை அலுவலர்கள் சஜாத்அகமது, கே.முருகேசன், நன்னடத்தை அலுவலர்கள் சுப்பிரமணியன், கார்த்திகா, ரவிச்சந்திரன், முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க திருச்சி மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன், கோவை நா.மனோகரன் அலுவலக மேலாளர் முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தற்போது வரை சுமார் 300 முன்னாள் சிறைவாசிகளிடமிருந்து உதவி கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றினை பரிசீலனை செய்து உடனடியாக முன்னாள் சிறைவாசிகள் சங்கத்தின் சார்பில் உதவிகள் வழங்க திட்டமிடுவது என்றும் வேலூர், திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள விண்ணப்பங்களையும் பெற்று ஒருங்கிணைத்து வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
(செ.நா.ஜனார்த்தனன், செயலாளர் 9443345667)
Comments
Post a Comment