மறைவு

பிரபல சினிமா
ஸ்டண்ட் மாஸ்டர்
ஜூடோ ரத்தினம்
வயது மூப்பு  காரணமாக
காலமானார்




வேலுார், ஜன. 
1,500 படங்களுக்கு சினிமா சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றிய ஜூடோ ரத்தினம்  தன் 95 வது வயதில்  காலமானார்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம், தர்ணம்பேட்டை பெரியப்ப முதலி தெருவை சேர்ந்தவர் கே.கே. ரத்தினம். இவர் சினிமா சண்டை பயிற்சி இயக்குனராகியதால் ஜூடோ ரத்தினம் என அழைக்கப்பட்டார். 1959 ம் ஆண்டு  தாமரைக்குளம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். பிறகு சில  படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார்.  1966 ம் ஆண்டு வல்லவன் ஒருவன் படத்திலிருந்து சண்டை பயிற்சி இயக்குனரானார்.
1980 ம் ஆண்டு ஒத்தையடி பாதையிலே என்ற படத்தை தயாரித்தார். 1,500 படங்களுக்கு  சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றிய இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். சங்கராதாஸ் சுவாமிகள் விருது , தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது  பெற்றுள்ளார்.
நடிகர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர், ரஜினி, கமல், பிரேம் நசீர், விஜய், அஜித் என அத்தனை நடிகர்களுக்கும் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம்,  கன்னடம், இந்தி ஆகிய மொழி படங்களில் பணியாற்றியுள்ளார்.  ரஜினி நடித்த  46 படங்களுக்கு
சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் தர்ணம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்த அவர்  இன்று மாலை 4:30 மணிக்கு வயது மூப்பின் காரணமாக  இறந்தார். இவரது  மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்